« अनजान | भूलिए रंजिशें, दोस्ती कीजिये » |
உறுதி செய்
Tamil Poetry |
இன்றைய இந்தியா,
இரங்கலுக் குட்பட்டது.
வீட்டிலிருந்து வெளியேறினால்,
சுற்றுப்புறச் சூழலால் பாதிப்பு;
வீட்டிலேயே ஒளிந்திருந்தால்,
திருடர்களால் இரத்தக் கொதிப்பு.
முதலில்,நம்
நாட்டைக் காக்க,
உறுதி செய்வோம்!
தன்னை ஈன்றோரையும்,
தன் னுடன் பிறந்தோரையும்,
தரணியின் பசுமையோடு
பொன்வாழ்வு வாழவந்த
பெண் சிசுவை;
பேணிக் காக்கத் தவறோம்,
என உறுதி செய்வோம்!
கடைக்கடையாய் ஏறியிறங்கி
மனமகிழும் நாம்;
சாலையோரச் சுமைகளாய்த்
தவித்து வாழும்
ஆதரவற்றோர்க்கு;
புத்தகச் சுமையின் வலிமையை,
ஒன்றுதிரண்டு எடுத்துரைக்க,
உறுதி செய்வோம்!
ஏழையின் பசிக்கு,
எடுப்புச்சோறு உணவாயினும்;
அவர்தம் அறிவுப்பசிக்கு,
புத்தகச் சுவையையும்,
தமிழ் இரசத்தையும்,
கற்றோராகிய நாம்
மனமாற வழங்க;
உறுதி செய்வோம்!
அச்சம்;
இந்தியரின் பலவீனம்!!
நாட்டைத் தாக்கிய பயங்கரவாதியை,
தூக்கிலிட வேண்டிய சிறைச்சாலை;
அக்கொடியோனுக் கிளையிட்டு,
உணவளித்த கொடுமையை;
அஞ்சாது எதிர்க்க,
உறுதி செய்வோம்!
இப்பாவச் செயலுக்கு பதிலாய்;
வறுமையால் வாடுவோர்காவது,
உணவளித்து இருக்கலாம்!
பெண் விடுதலைக்கு
அயராது பாடுபட்ட,
மகாகவியின் ஆன்மா;
இன்றும்,
அலைந்துகொண்டுதான் இருக்கிறது!
நல்லிரவிலும் தயங்காது,
சாலையில் பெண்கள்;
அச்சம் தவிர்த்து
நடந்து வர,
பாடுபடுவோம் என,
உறுதி செய்வோம்!