« »

எல்லாம் பொது

0 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 5
Loading...
Tamil Poetry

இறக்கம் கொண்ட இயற்கையன்னை
பொன் விளையும் பூமியையும்,
அளவிலா அலைகடலையும்,
மக்களுக்கும் மாக்களுக்கும்;
பொதுவாகவே படைத்துள்ளால்!

கார் வண்ண ஆடையுடன்
இடி இடிக்கும் இமைப்பொழுதில்,
நீல வண்ண மேனியான்,
அச்சத்துடன் சிந்தும் நீர்;
அவணியின் அணைத்து
ஜீவராசிகளுக்கும் பொதுவே!

ஐயகோ! இன்று,
இப்பொதுவான குடிநீரும்,
காசாகிப் போகும்,
அவலம்தான் என்னவோ?

சீறுகின்ற சிறுத்தையும்,
துள்ளியோடும் புள்ளிமானும்,
வேட்டையாடவே பொது
எனக்கருதும் நமக்கு;
அரவணைப்பற்ற ஆதரவற்றோர்;
நம் அன்பிற்குப் பொது
எனத்தோன்றும் நாள் என்றோ?

நாம் சுவாசிக்கும் காற்றும் பொதுவே!
காட்டை அழித்து,
நாட்டை விரிக்கும்,
நாசப்பணி தொடருமாயின்;
இயற்கையின் இன்பக்காற்றை,
முகர முடியுமோ?

இங்ஙனம்,
பொதுவாக இருந்தவற்றை,
செல்வந்தர்கள் வாங்கிவிட்டதால்;
பொதுவான ஒவ்வொன்றும்,
அவர்களுக்கே சொந்தமாயிற்று!

Leave a Reply