« »

மகளிர் மாண்பு (Women’s Dignity)

0 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 5
Loading...
Tamil Poetry

தீப்பெட்டிக்குள் அடைக்கப்பட்ட
தீக்குச்சிகளாய்;
அடுப்பறைக்குள் பாடுபட்ட
அடிமைப் பெண்களின்;
காலமெல்லாம் என்றைக்கோ,
காற்றோடு போயிற்று…!

விந்தியத்து மலைகூட
வேதனையால் துடிக்க;
எமைவிட்டுப் பிரிந்த
இந்திராகாந்தி மாமங்கை;
கலங்கிய நம் பாரதத்தைக்,
கடமை தவறாது காத்தவள்!

வறுமையிலும் வலிமையாய்
வாழும் பெண்கள்;
உள்ளமெனும் கருவறையில்
எதிர்கால இந்தியாவைச்,
சுமக்கும் தூண்கள்!

அழகுக்கே எடுத்துக்காட்டாய்
அழைக்கப்படும் நிலாப்பெண்ணும்;
தன்னைத்தீண்ட முயல்பவரைத்
தூயஈசனின் நெற்றிப் பொட்டாய்ச்;
சுட்டெரிக்கத் தயங்கமாட்டாள்!

தன்னை வறுத்தித்
தம்மவர் நலத்திற்கும்,
தேசத்தின் வலத்திற்கும்,
பாவையர் சிந்தியது;
கண்ணீரல்ல,செந்நீர்…!

இதுவரை சிந்தப்பட்ட
ஈகைப் பெண்களின் கண்ணீர்;
புவியினர் செய்த
பாவத்தைக் கழுவும்;
புனிதத்தின் உருவான
கங்கை நதியாகும்!

Leave a Reply