« नज़ारा……. | मेरे हलक़ में भी दो बूँद डालिये बाबू » |
முந்துக (Precede)
Tamil Poetry |
மனிதனுக்கு மனிதன்
மாறுபாடளிக்கும்;
சிரத்தை நம்முள்,
சிறக்க முந்துக!
நம்மை நாமே
பலவீனமாக எண்ணும்;
பாவ எண்ணத்தைத்,
துறக்க முந்துக!
உரிமைக்காக உணர்ச்சிகளை
எழுப்பும் நாம்;
கடமைகளைக் கவலையின்றி,
கடக்க முந்துக!
வீறுகொண்ட வேங்கைகளாம்
இந்திய இளைஞர்கள்;
வறுமைத் தீயை,
அணைக்க முந்துக!
வீழ்ச்சியும் எழுச்சியும்,
அலைகளின் சிறப்பு!
அம்மீண்டெழும் உறுதியை,
அடைய முந்துக!
இருளற்ற பாதையில்,
இலக்கை நோக்கி;
திடத்துடன் செல்வோரை,
வெற்றி;
நம் நிழல்போல முந்திவரும்!