« »

உலகப்பொதுமை

0 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 5
Loading...
Tamil Poetry

ஏழைப் பணக்காரன்
ஏற்றத்தாழ்வு இன்றி;
மக்கள் மாக்கள்
மாறுபாடு இன்றி;
பார்தனில் சாதிமதப்
பாகுபாடு இன்றி;
உயிர்கள் அத்துணையும்,
உழைப்பின்றி வாழ்வதுண்டோ?

கழிவுகளை அகற்றுவார்க்கும்,
கழகங்களில் அமர்ந் திருப்பார்க்கும்,
வித்தியாசம் ஏதுமின்றி;
வியர்வைத்துளி சிந்துவதேன்?

உயிர்கள் அனைத்தின்
உன்னதமான வியர்வை;
உவர்ப்புத் தன்மையையே,
உருவமாய்க் கொண்டது!

என்னதான் விலையுயர்ந்த
ஒப்பனை அணிந்தாலும்,
பொதுமக்கள் அனைவர்க்கும்
பொதுவாய் உலகினில்;
புனைவு தார அழகினை
புன்னகை அளித்திடுமே!

கைக்கடிகாரத்தின் விலை,
ஐந்தாயினும் ஐம்பதாயினும்;
அதுகாட்டும் நேரம்,
அனைவர்க்கும் பொதுவே!

கிரேக்கராயினும் கிறித்தவராயினும்,
இந்துக்களாயினும் இஸ்லாமியராயினும்,
இரத்தத்தின் நிறம்
இவ்வனைவர்க்கும் சிவப்பே!

Leave a Reply