« »

இயல்பே இயக்கம்

0 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 5
Loading...
English Poetry

வையம் எனும் உலகம் – இதில்
இருக்கும் உயிர் அனைத்தும்;
இயல்பாய் என்றும் இயங்க,
இனியும் ஏன் தயக்கம்?

மாற்றம்,இது என்றும் – புவியில்
மாறா ஓர் மாயம்;
காலம் தரும் பாடம்,
கற்க மறுப்பது அநியாயம்!

இரவில் கண் விழித்து – பட்டப்
பகலில் நன்கு உறங்கி;
ஈட்டும் நம் ஊதியம்
இயற்கை விதிக்கும் சாபம்!

செயற்கை எனும் மயக்கம் – நம்
இயல்பை என்றும் கெடுக்கும்;
மனிதர் இதை உணர்ந்தால்,
மண்ணில் நன்மை பயக்கும்!

Leave a Reply