« 25 years of togetherness | ग़ज़ल…आँसुओं को! » |
எதிர்கொள்…!
Tamil Poetry |
வலிமை அடைந்திட,
வலிகளை எதிர்கொள் !
வலிகள் நீங்கிட,
வேதனையை எதிர்கொள் !
முடக்கம் முறிந்திட,
முயற்சியை எதிர்கொள் !
முயற்சி கைகூட,
பயிற்சியை எதிர்கொள் !
உச்சத்தை எட்டிட,
அச்சத்தை எதிர்கொள் !
அச்சம் அழிந்திட,
ஆபத்தை எதிர்கொள் !
சாதனை புரிந்திட,
சோதனையை எதிர்கொள் !
சோதனை பழகிட,
சவால்களை எதிர்கொள் !
தனிமரமாய் நின்று,
தனிமையை எதிர்கொள் !
துணையிலாத் தருணங்களில்,
துணிவினை எதிர்கொள் !
தூக்கத்தை ஒழித்திட,
ஊக்கத்தை எதிர்கொள் !
உன்னை நீ அறிந்திட,
உள்ளுணர்வை எதிர்கொள் !
Arumai; Arumai; miga miga arumai! Muthaana kavithai varigal!
Thanks a lot 🙂
kavitahi varthaikal vazhgai munnetra, mana niraivu pera adipadi varikal.pramatham
dr.raju