« »

கொடையே கொள்கை !

0 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 5
Loading...
Tamil Poetry

நம் அற்ப ஆயுள்,
அளித்திடும் பலருக்கு
உடற் கொடை!

உடலை விட்டு
உயிர் பிரிந்தவுடன்;
சுழலும் இப் புவியில்:
சூரியக் கதிர்களையே
கண்டிராத மாந்தர்க்கு,
காட்சிதரும் கண் கொடை!

தேகத்திற்கு ஏதேனும்
துன்பம் நேர்ந்தால்,
தாய்மைக்கு நிகராய்
துடிதுடித்துப் போகும் இதயம்;
கொடையாய் பிறரை
காத்திடச் சென்றாலும்
உயிர்தந்த உம் பெயரையே
உச்சரித்துத் துடிக்கும்!

ஒருவர் கேட்டு
ஒருமனமாய் கொடுப்பது,
கொடையல்ல, பிச்சை!

நற்பலன் வேண்டி
அளிப்பது தானம்;
பிரதிபலன் வேண்டாது
கொடுப்பது கொடை!

One Comment

  1. Rajamani Srinivasan says:

    Very beautiful explanation given for ‘Kodai’ here. Wonderful message of ‘donation’of our body/organ/s
    after our lifetime is simply explained in very nice way. Super Arthika. Keep it up.

Leave a Reply