« A googly for sure….! | Contradictions » |
பூக்கவை…!
Tamil Poetry |
அடைக்கலம் இன்றி
அலறும் அகதிகளிடம்;
ஆதரவைப் பூக்கவை!
உழைப்பின்றி ஊதியத்தை
எதிர்பார்ப்போர் உடலில்;
வியர்வையைப் பூக்கவை!
குடித்து தினந்தினம்
கூத்தாடுவோர் உளத்தில்;
குடிமையைப் பூக்கவை!
சாதிவெறி நிறைந்த
சராசரி மக்களிடம்;
சமரசம் பூக்கவை!
துவண்டோர் மனதில்
துணையாய் நின்று;
துள்ளலைப் பூக்கவை!
படிப்பின்றி பழுதாகும்
பூவையரிடம்;மலாலாவின்
புரட்சியைப் பூக்கவை!
உன்னை புண்படச் செய்தோரின்
பூவிதழ் தனிலும்;
புன்னகைப் பூக்கவை!
இக்கவிதையைப் படித்ததும் என் மனம் மகிழ்ச்சியில் பூத்தது. சிறு திருத்தும் ‘பூவையரிடம்; ‘பூவயரிடம்’ (சின்ன எழுத்து பிழை).
Thank you very much 🙂 Made the correction.
Indha kavithaiyil enakku pidiththa varigal
உன்னை புண்படச் செய்தோரின்
பூவிதழ் தனிலும்;
புன்னகைப் பூக்கவை!
துவன்டூர் மனதில் – please correct it as thuvandore….
Thanks for your pat and corrections too..I corrected the grammar mistake..!