« इक छोटी सी बात बता…. (मुक्तक) | काश » |
உன் கண்கள் !
Tamil Poetry |
என்னைக் காணும் கணத்தில்,
உன் கண்கள்;
கவரும் காந்தங்கள்!
நீ விழிக்கும் வினாடியில்,
உன் விழிகள்
விரிந்திடும் விந்தங்கள்!
உன் ஆவேச அளவையில்,
உன் அக்கிகள்;
அகோர அக்கினிப்பிளப்புகள்!
நீ கண்ணிமைக்கும் தியாலத்தில்,
உன் தாரைகள்;
துள்ளும் தட்டாரப்பூச்சிகள்!
என்னை நோக்கும் நொடியில்,
உன் நேத்திரங்கள்;
நெஞ்சைக் கிழிக்கும் கூர்வாள்கள்!
என் பூவிழிகளை
மொய்க்கும் உன் கண்கள்;
கருவெள்ளை வண்டுகள்!
இதை படிக்கும் என் கண்கள் பிரமித்தன