« »

ஏங்கும் என் இதயம் !

0 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 5
Loading...
Tamil Poetry

என் காலைக் கதிரவனைத் திருடி,
உன் வீட்டிற்கு
விளக்கேற்றிக் கொண்டது போதும்!

என் வெள்ளைப் பகலைத் திருடி,
உன் பற்களைப்
பளிச்சிடச் செய்தது போதும்!

என் சாயுங் காலத்தைத் திருடி,
உன் சட்டைக்குச்
சாயம் தீட்டியது போதும்!

என் ராப்பொழுதைத் திருடி,
உன் ரோமங்களைக்
கருமையாக்கியது போதும்!

என் மூச்சுக்காற்றைத் திருடி,
உன் முகட்டாய்
மாற்றியது போதும்!

என் வியர்வை முத்துக்களைத் திருடி,
உன் கரங்களில்
காப்பு அணிந்தது போதும்!

இத்துனையும் திருடிய நீ,
எப்போது தன்னைக் கவர்வாயென
ஏங்கித் துடிக்கும்;
என் இதயம்!

3 Comments

  1. Rajamani Srinivasan says:

    Arumai, Arumaiyaana, Idhayathai kollai konda kavidhai! Keep it up!! Expect more like this during this year!!!

  2. Kalyani krishnan says:

    எப்புடி இப்புடி? கலக்கல் போ…

  3. Constance says:

    Always a good job right here. Keep rolling on thhurgo.

Leave a Reply