« बोलते पलों का घर ….. | வேண்டும்! » |
சற்றும் தணியவில்லை…!
Tamil Poetry |
அலையும் உன் கண்கள்
என்னை
அழைத்தது போதும்!
ஒலிக்கும் உன் கழல்கள்
என் கர்வத்தை
ஒழித்தது போதும் !
களைகொண்ட உன் முகம்
என் மனதைக்
கலைத்தது போதும் !
களங்கமில்லா உன் சிரிப்பு
என் சிந்தையைக்
கலக்கியது போதும் !
தனியாக என்னைத் தவிக்கவைத்தும்
உன் நேசம்
தணியவில்லை சற்றும் !
Mayakkum un kavidhai padithathu podhaadhu. Keep writing. ummaaaa
Very nice.