« சற்றும் தணியவில்லை…! | TOMB » |
வேண்டும்!
Tamil Poetry |
உன் வீட்டில்
உலை வைக்க,நீ
உழைத்திட வேண்டும்!
ஓங்கும் பாரதமாய்
ஒளித்திட,ஒற்கத்தை
ஒழித்திட வேண்டும்!
உதவியவரை நாம்
உண்ணும் போதெல்லாம்
உன்னுதல் வேண்டும்!
கடமையை நாம்
கணந்தவறாமல்
கனக்க வேண்டும்!
வஞ்சம் எனும்
வலையில் சிக்காது
வளைய வேண்டும்!
உன்னை உணரும்
அரிய ஆயத்தை
அறிந்திட வேண்டும்!
Enjoyed it.
Different one from your other poems with beautiful monai ilakkanam.
Nandrigal _/\_