« »

விட்டுக்கொடுக்காது வாக்களிப்போம் !!!

0 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 5
Loading...
Tamil Poetry

அங்கும் இங்குமாய்,
எங்கு நோக்கினும்;
போக்குவரத்தை பாதிக்கும்
மேடைப் பேச்சுகளும்;
மக்களை மயக்கும்
இலவச அறிக்கைகளும் !

ஆம் !
தேர்தல் தேதி
நெருங்கும் அறிகுறி !

எம்மிடம்,
இல்லாப் பொருளை
இலவசமாய் எமக்களித்து;
வாக்கினைத் திரட்டும்
வேடிக்கை வேட்பாளர்களே !

கழிவு நீர் வழிந்தோடும் சாக்கடைகளும்,
குன்றும் குழியுமாய் உள்ள சாலைகளும்,
தற்போதுதான் தங்களது
திருக்கண்களுக்கு தென்பட்டதா?

மக்களாகிய நாங்கள்
எங்களது ஓட்டுரிமையை
எவருக்கும் விட்டுக்கொடுக்காது;
நேர்மையாய் வாக்களிப்போம் !!!

– By : AARTHIKA.R

2 Comments

  1. kalyani krishnan says:

    WELL SAID…..

  2. dr.raju says:

    most certainly.

Leave a Reply